இன்னும் திறக்கவே இல்ல... அதற்குள் புதிய பாம்பன் பாலம் பற்றி வந்த திடுக் தகவல்
புதிய பாம்பன் பாலத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து அதன் அருகிலே சுமார் ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணிகளை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது
தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நவம்பர் 13 ஆம் தேதி கடலுக்கு நடுவே அமைக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு நடத்தினார். செங்குத்தாக அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை தூக்கியும், இறக்கியும்... பின்னர் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தி ஆய்வு மேற்கோண்டார். இந்த நிலையில் புதிய பாம்பன் பாலத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார். கப்பல்கள் செல்ல வழி ஏற்படுத்தும் தூக்கு பாலத்தில் மட்டும் 50 கி.மீ வேகத்தில் இயக்க வேண்டும் என்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அதிருப்தி விளக்கம் அளித்துள்ளார்.