திருவள்ளூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர்..

 
1

வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

2

சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் ன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், திருநின்றவூர், உள்ளிட்ட பகுதிகளில் அவர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர், மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

4

தொடர்ந்து வேலப்பன் சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அவர், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.இந்த ஆய்வின்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் , நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ஜெயக்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர். ஆனந் குமார் , மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்