இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை

 
rain school leave rain school leave

மழை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Rain

கனமழை எச்சரிக்கையால் நாகை, மயிலாடுதுறை, கடலூர் ,விழுப்புரம், அரியலூர் ,திருவாரூர், தஞ்சாவூரில் பள்ளி ,ல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

rain school

இந்நிலையில்   மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் மழைக்காலம் முடிந்ததும்,  இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்.  கனமழையால் விடப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவெடுக்கலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.