அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை!!

 
rain

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

tn

இந்நிலையில் தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை திருவள்ளூர் ,சென்னை ,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.