'இந்த' 4 மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமாம் ; வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
karur rain

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நேற்று  தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

rain

இந்நிலையில் தென் கேரளாவிலிருந்து வட உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தூத்துக்குடி ,கன்னியாகுமரி ,தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

நாளை முதல் வருகிற 5ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.  சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 , குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். அதேசமயம் மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.