அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை!!

 
rain

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசிலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற  29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

Rain

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.