சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

 
rain rain

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், பட்டினப்பாக்கம், அடையாறு, தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், பம்மல், அனுக்காபுத்தூர் பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.