அடுத்த 3 மணிநேரத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை!!

 
rain

அடுத்த 3 மணிநேரத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இன்றும் ,நாளையும் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22.10.2023 மற்றும் 23.10.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

24.10.2023 மற்றும் 25.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மதியம் 1 மணிவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.