இந்த மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

 
rain-34

வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் 22-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இன்று மற்றும் நாளை உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.

rain

20 முதல் 22 ஆம் தேதி வரை உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29,  குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

rain

இன்று முதல் 20-ஆம் தேதி வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  அதேபோல் இன்று மற்றும் நாளை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

அத்துடன் மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் அருகே புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . தென்கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இந்தியப் பெருங்கடல் அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.