“மழையால் பாடத்திட்டதை குறைக்க வாய்ப்பில்லை!” - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil-mahesh-3

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  அத்துடன்  கடந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதுடன்,   பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. 

Tomorrow school leave

இதையடுத்து கொரோனா குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து பள்ளிகளும், கல்லூரிகளும் படிப்படியாக திறக்கப்பட்டன. வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கனமழை காரணமாக தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்டபடி பாடங்கள் நடத்தி முடிக்க, முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா? என்று கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

school

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க அவசியமில்லை. பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.