அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ..

 
மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,ருமபுரி, கடலூ, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குமரிக்கடல் பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசும் என்பதால்,  மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.