வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் - தமிழக ஆளுநர் புகழஞ்சலி

 
rn ravi

வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாக  திருநாளில் அவருக்கு நன்றியுள்ள தேசம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது என ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.  ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமல உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், புகழ்பெற்ற வீரபாண்டியகட்டபொம்மனின் தியாகத் திருநாளில் அவருக்கு நன்றியுள்ள தேசம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது. தனது தன்னிகரில்லா துணிச்சல், ஈடு இணையில்லா வீரம், தன்னலமில்லா தியாகங்கள் ஆகியவற்றால், நம் இதயங்களில் என்றென்றும் அவர் வாழ்ந்து ஒவ்வோர் பாரதியருக்கும் ஊக்கமளிப்பார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.