ஆளுநர் மாளிகையை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்படுகிறது பிரதமர் அலுவலகம்..!

 
1 1

இந்திய பிரதமர் அலுவலகத்தின் (PMO) புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்த்' (Seva Teerth) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. 'சேவா' என்றால் 'சேவை' என்றும், 'தீர்த்த்' என்றால் 'புனிதத் தலம்' அல்லது 'மையம்' என்றும் பொருள். இது, 'பொதுச் சேவைக்கான புனித மையம்' என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இந்த புதிய வளாகம், முன்பு 'எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ்' (Executive Enclave) என்று அறியப்பட்டது.

சேவைகளை வழங்கும் புனித இடம் என்ற பொருள்படும்படி இந்த பெயர் வைக்கப்பட உள்ளது. குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிர்வாகம் என்பதை உணர்த்தும் வகையிலும், பிரதமர் அலுவலகம் என்பது அதிகார மையம் அல்ல, அது புனித சேவைக்கான மையம், அதாவது சேவை இல்லம் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பெயர் மாற்றத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள ஆளுநர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களான 'ராஜ் பவன்' தற்போது 'லோக் பவன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், 'சென்ட்ரல் செக்ரெட்டேரியட்' இனி 'கர்தவ்ய பவன்' என்று அழைக்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.