ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு!!

 
ttn

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுமார் 3 கோடியே 10 லட்சம் பணம் பெற்றதாகவும் , வேலை வாங்கித் தராத நிலையில் பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்ததாகவும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில்  புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செய்ததுடன் அவரது உதவியாளர் உள்ளிட்டோரையும் கைது செய்தனர்.

rajendra balaji

பணமோசடி தொடர்பாக விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில்  முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதனால் ராஜேந்திர பாலாஜி பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  அத்துடன் அவர் பெங்களூரில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் தனிப்படைஒன்று பெங்களூரு விரைந்தது.  இதைத்தொடர்ந்து கோவை, மதுரை, தென்காசி, பெங்களூர் மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் தனிப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

supreme court

இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி தனது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.  அத்துடன் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டுள்ளார் . ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ராஜேந்திரபாலாஜி மேல்முறையீடு காவல்துறைக்கு சவாலாக அமைந்தது.

govt

இந்நிலையில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீது ,  தங்களது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று தமிழக அரசு கேவியட்  மனுதாக்கல் செய்துள்ளது.