விஜய்யால் அரசியலில் சாதிக்க முடியாது- ரஜினியின் சகோதரர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ், “நடிகர் விஜய் அரசியல் வருகையால் எந்த பிரயோஜனமும் இல்லை. விஜய் ஆசை பட்டிருக்கிறார். அதனால் கமல் மாதிரி விஜய்யும் முயற்சி செய்யட்டும்.. ஆனால் தமிழ்நாட்டில் சாதிக்க முடியாது, ஜெயிக்க முடியாது” என்றார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி அரசியலில் கால் பதித்தார். இதனைத்தொடர்து தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாணி வி.சாலையில் நடைபெற்றது. இதில் தன் கட்சியின் குறிக்கோள், கொள்கைகள், செயல்திட்டம், கொள்கைத்தலைவர்கள் யார், அரசியல் எதிரிகள் யார் யார் என்பதையெல்லாம் விஜய் தெரிவித்திருந்தார். அன்றிலிருந்து விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கலவையான விமர்சனங்களை பலரும் முன்வைத்துவருகின்றனர்.