"ரஜினி அரசியலில் இருந்து விலகியது ஏன்"- மர்மம் உடைத்த ரஜினி ரசிகர் மன்ற தலைவர்

 
ச்ச்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பயணம் குறித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா விமர்சனத்திற்கு வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் இரவி பதிலடி கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றார். அவரை மிரட்டியது திமுக. திமுகவின் மிரட்டலால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை. திமுகவுக்கு எதிராக விஜய் நிற்கிறார் என்றால் அவருக்கு மனவலிமை அதிகம் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் இரவி, “ரஜினிகாந்த் அவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே... கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார், மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை. கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்.. #பிழைக்கவும்_ரஜினி_பழிக்கவும்_ரஜினி” எனக் குறிப்பிட்டுள்ளார்.