“கடலோர மக்கள் உஷார்”- ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் வீடியோ!
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம்... நம் நாட்டின் நற்பெயர், நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை கெடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி, நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை பலிகொண்டது. ஆகவே இந்த கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
கடலோர மக்களுக்காக தலைவர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ#Thalaivar @rajinikanth #CISF pic.twitter.com/w2ZM6gF7Ma
— Sholinghur N Ravi (@SholinghurRavi) March 23, 2025
இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிஐஎஸ்எப், வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் சென்று, உற்சாகப்படுத்துங்கள்! நன்றி... வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


