விஜய்யின் மாநாடு மிகப் பெரிய வெற்றி- ரஜினிகாந்த்

 
ச் ச்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப் பெரிய வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

rajini

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து இருந்தனர். இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.