31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையானார் பேரறிவாளன் - கடந்து வந்த பாதை!!

 
tn

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு  இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்து,  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.  பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை அறிந்து அவரது தாயார் அற்புதம்மாள், சகோதரி , உறவினர்கள் ஆனந்த கண்ணீரில் மிதந்தனர்.

பேரறிவாளன் - கடந்து வந்த பாதை

மே 21 1991  : சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை 

ஜூன் 111991 : பேரறிவாளன் கைது 

ஜன 28 1998 :  ராஜீவ்காந்தி கொலை வழக்கில்   குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்

tn

மே 11  1999 : சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மீதமுள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அக்டோபர் 8 1999   - மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

அக்டோபர் 17 1999,   - தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்

tn

அக் 29 1999 : தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நால்வரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்  தமிழக ஆளுநர் பாத்திமா பீவி

ஏப்ரல் 25  2000 - பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்த ஆளுநர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்

ஏப்ரல் 26  2000, -குடியரசுத் தலைவருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்

tn

ஆகஸ்ட் 26 2011 -பேரறிவாளனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்

கருணை மனுவை குடியரசு தலைவர் தாமதமாக நிராகரித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு பதிவு செய்த நிலையில் தன்னை  விடுவிக்கக்கோரி 2016ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.

மே 18 2022 -- பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு