கொரோனா அதிகரிப்பால் பயிற்சி மையத்துக்கு விடுமுறை!

 
tn

 கொரோனா அதிகரிப்பால் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

corona

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 56 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் 95 பேருக்கும் , செங்கல்பட்டில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 17 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. . 
 

corona
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 35 மாணவர்களுக்கு கொரோனா  ஏற்பட்டதை அடுத்து மையத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13ஆம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று உதவி பதிவாளர் தெரிவித்துள்ளார். கொரோனா  பரவலால் ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை பயிற்சி மையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . விடுதியில் உள்ள மாணவர்கள் உடனடியாக விடுதியை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   தற்போது இதன் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ள நிலையில் பயிற்சி மையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.