மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தேமுதிகவிற்கு சீட்..

 
kp munusamy kp munusamy


2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில்  அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளார் கே.பி.முனுசாமி செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது மாநிலங்களவைத் தேர்தலுக்கு அதிமுக வேட்பாளராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரையை அறிவித்தார்.  மேலும் மற்றொரு அதிமுக வேட்பாளராக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த  தனபால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.  

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தேமுதிகவிற்கு  சீட்.. 

மேலும் தேமுதிக , அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாகவும், 2025ல் நடைபெறும் மாந்லங்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் வழங்கப்படும் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.  ஏப்ரல், 2026ல் தம்பிதுரை, G.K வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிகிறது. பிப்ரவரி அல்லது மார்ச்-ல் தேர்தல் நடைபெறும். இதன்மூலம், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒரு ராஜ்யசபா MP-ஐ DMDKபெறுகிறது.

 இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுக்க முடிவின்படி, 19.06.2025 அன்று நடைபெறவுள்ள  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேறக்கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக I.S.இன்பதுரை மற்றும் ம.தனபால்  ஆ கியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.