”தவெக சோஷியல் மீடியா கட்சி” - இராம. சீனிவாசன்

 
பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி - விஜய் அறிவிப்பு பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி - விஜய் அறிவிப்பு

தேர்தலில் செல்வாக்கை நிரூபிக்காத கட்சி விஜய் கட்சி என பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு எதிராக உருவாகும் பலமான கூட்டணி: பாஜக ராம சீனிவாசன் நம்பிக்கை! -  bjp rama srinivasan confident of strong alliance against dmk - Samayam Tamil

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இராம. சீனிவாசன், “தேர்தலில் செல்வாக்கை நிரூபிக்காத கட்சி விஜய் கட்சி, பாஜகவுடன் கூட்டணிக்கு வருவாரா என்று விஜய் இடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் வலிமையான கூட்டணியை உருவாக்க நயினார் நாகேந்திரன் முயற்சி செய்து வருகிறார். அதிமுக கூட்டணி தேவையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. தேர்தல் அடிப்படையில் அமைக்கப்பட்ட கூட்டணி.. திமுகவுக்கு எதிராக அனைத்து  ஓட்டையும் கூட்டணியாக சேர்க்கப்படும்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பாஜவை விமர்சனம் செய்வதில்லை. அது ஏன் என விஜய்யை பார்த்து கேளுங்கள். ஆனால் பனையூர் பங்களாவை விட்டு விஜய் வெளியே வர மாட்டார். தேர்தலில் செல்வாக்கை நிரூபிக்காத கட்சி விஜய் கட்சி. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே கட்சி தொடங்கிவிட்டார்.. ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை..? ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கும் போது விஜய்க்கு கூட்டம் சேர்வதை விட 20 மடங்கு கூட்டம் சேர்ந்தது. கூட்டம் எல்லாம் ஓட்டு ஆகாது. தமிழ்நாட்டிலேயும் ஆந்திராவிலும் எம்ஜிஆரை, என்டிஆரை தவிர சினிமாவில் இருந்து வந்து வெற்றி பெற்றவர்கள் யாரும் இல்லை. தவெக என்பது சமூக ஊடகத்தில் மட்டுமே செயல்படும் கட்சி, களத்தில் பணி செய்ய தொண்டர்கள் இல்லாத கட்சி. தேர்தலில் நின்று வாக்கு சதவீதத்தை நிரூபிக்காத ஒரே கட்சி தவெக தான். நாம் தமிழர் கட்சி கூட நிரூபித்துவிட்டார்கள். டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் திமுகவுக்கு எதிரானவர்கள், திமுகவை எதிர்க்கும் வலிமையான கூட்டணி NDA தான். திமுகவோடு எங்களுக்கும் உள்ள முரண்பாடு பகையாளி சண்டை, அதிமுகவில் இருப்பது பங்காளி சண்டை. தேர்தல் நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும். கூட்டணிக்கு வருவார்கள். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அவமதித்து இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது. அடுத்த கார்த்திகை தீபத்தில் நிச்சயமாக மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்” என்றார்.