சென்னை மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் யுவராஜ் மறைவு - ராமதாஸ் இரங்கல்!

 
ramadoss ramadoss

சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் புகழ்பெற்ற முதுகு தண்டுவட  அறுவை சிகிச்சை வல்லுனருமான மருத்துவர் இரா யுவராஜ் உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் நல்லி யுவராஜ் அவர்களின்தந்தை நல்லி இராமநாதன் எனது குடும்பநண்பர். சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.  அந்த வகையில் அவரது புதல்வரான மருத்துவர் நல்லி யுவராஜ் குழந்தை பருவத்தில் இருந்தே எங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார்.  அவர்மருத்துவ பட்டம் பெற்ற போதும், உயர்சிறப்பு படிப்புகளை முடித்து புகழ்பெற்ற மருத்துவராக உயர்ந்த போதும் நான் மிகுந்தமகிழ்ச்சி அடைந்தேன். மருத்துவத்துறையில் அவர் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இன்னும் புதியஉயரங்களுக்கு அவர் சென்றிருப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. அதற்குள்ளாகவே காலம் அவரை நம்மிடம் இருந்து பறித்து கொண்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. 



 
மருத்துவர் நல்லி யுவராஜ் உடல் நலத்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்தபோது அவர் விரைவில் நலம்அடைந்து மருத்துவ பணியை தொடர்வார் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் மாறாக அவர்ஒப்பீட்டு அளவில் இளம் வயதில் உயிரிழந்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.  அவரதுமறைவு மருத்துவ துறைக்கு பேரிழப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை. மருத்துவர் நல்லி யுவராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது தந்தை நல்லி இராமநாதன் மற்றும் குடும்பத்தினர், மருத்துவத்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.