நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தர்மராஜ் சோலைராஜ் - ராமதாஸ் வாழ்த்து

 
pmk

நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தர்மராஜ் சோலைராஜூக்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில்  நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில்  ஆடவர் நீளம் தாண்டுதல் டி-64 பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் தர்மராஜ் சோலைராஜ் 6.80 புள்ளிகளைப் பெற்று  தங்கப் பதக்கத்தை வென்றார். இலங்கை வீரர் மத்தக கமாகே 6.68 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜப்பான் வீரர் மதாயோஷி கோட்டோ 6.35 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.


இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் தர்மராஜ் சோலைராஜ் 6.80 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய ஆசிய சாதனையையும்,  பாரா உலக சாதனையையும் படைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தர்மராஜ் சோலைராஜின் இந்த சாதனைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதுடன், மேலும் பல  புதிய சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.