ஊழலுக்கு முடிவு கட்ட ஊடகங்கள் உறுதியாக துணை நிற்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
ஊழலுக்கு முடிவு கட்டுவதற்கான போரில் ஊடகங்கள் உறுதியாக துணை நிற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி தேசிய பத்திரிக்கை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகங்களுக்கு தேசிய பத்திரிகையாளர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழலுக்கு முடிவு கட்டுவதற்கான போரில் ஊடகங்கள் உறுதியாக துணை நிற்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 16, 2024
இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகங்களுக்கு தேசிய பத்திரிகையாளர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்களின் பணியும், பொறுப்புகளும் எல்லையில்லாதவை.…
ஊடகங்களின் பணியும், பொறுப்புகளும் எல்லையில்லாதவை. ஜனநாயகத்தைக் காக்கும் ஊடகங்கள், அதே ஜனநாயகத்தை அரித்துக் கொண்டிருக்கும் ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான போரில் துணை நிற்க வேண்டும். ஊழல்கள் எங்கு நடந்தாலும் அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.