அன்புமணி ஆதரவு பாமக எம்.எல்.ஏக்களுக்கு ராமதாஸ் நோட்டீஸ்..!!

 
ramadoss ramadoss


 பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  

பாமகவில் நிறுவன ராமதாஸுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், யார் பக்கம் நிற்பது என தெரியாமல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.  இதில் பாதி பேர் அன்புமணி பக்கமும், பாதி பேர் ராமதாஸ் பக்கம் என பாமக இரண்டாக பிளவுற்றுக் கிடக்கிறது.  இதில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரில் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகிய இருவரும் ராமதாஸ் பக்கமும்,  எம்.எல்.ஏக்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் அன்புமணி பக்கமும் உள்ளனர். 

Ungaludan Stalin - Anbumani Ramadoss

இதில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அண்மையில் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து, பாமக கொறடாவாக இருக்கும் அருளை நீக்கிவிட்டு மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமாரை கொறடாவாக நியமிக்க வேண்டும் என மனு அளித்தனர்.  இதனையடுத்து  அன்புமணி ஆதரவு  பாமக எம்.எல்.ஏக்கள்  3 பேரை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக, தலைமை நிலையச் செயலாளரும், ராமதாஸ் ஆதரவாளருமான அன்பழகன் அறித்துள்ளார்.  

இந்நிலையில் தற்போது  பாமக உள்ள அன்புமணி ஆதரவு  எம்.எல்.ஏக்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.  பதிவுத் தபாக் மூலம் தனித்தனியே 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் பாமக நிறுவனர் ராம்தாஸ்.  அதில், கட்சியில் இருந்து ஏன் 4 பேரையும் நிரந்தரமாக நீக்கக் கூடாது என விளக்கம் கேட்கப்படுள்ளது.  ஏற்கனவே 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விளக்கம் கேட்டு ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.