ஓட்டுக்கேட்பு கருவியை போலீசாரிடம் தர மறுக்கும் ராமதாஸ்!
தனது தைலாபுரம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஓட்டுக்கேட்பு கருவியை போலீசாரிடம் ராமதாஸ் தர மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. நாற்காலியில் அதிநவீன ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிப்பு எதிரொலியால் சோபாவை மாற்றினார் பாமக நிறுவனர் ராமதாஸ். அந்த கருவி லண்டனிலிருந்து வாங்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார். இதுதொடர்பாக புதுச்சேரி கீரனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் பாமகவினர் புகார் அளித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாக அளித்த புகாரில், ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்
இந்நிலையில் தனது தைலாபுரம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஓட்டுக்கேட்பு கருவியை போலீசாரிடம் ராமதாஸ் தர மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஏஜென்ஸியின் முழுமையான ஆய்வறிக்கை வந்த பிறகே ஓட்டுக்கேட்பு கருவியை தரமுடியும் என ராமதாஸ் கூறுவதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


