தேசிய கைத்தறி விருதுக்கு திண்டுக்கல் நெசவாளர் தேர்வு- ராமதாஸ் வாழ்த்து

 
தேசிய கைத்தறி விருதுக்கு திண்டுக்கல் நெசவாளர் தேர்வு- ராமதாஸ் வாழ்த்து

திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான பாலகிருஷ்ணன், தான் நெய்த பருத்திப் புடவைக்காக, தேசிய கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். நாடு முழுவதும் இருந்து 429 பேர் விண்ணப்பித்த நிலையில், 14 பேருக்கு இவ்விருது ஆகஸ் 7 ஆம் தேதி டெல்லியில் வழங்கப்படவுள்ளது. 

என்.எல்.சிக்காக மீண்டும் மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா?.. மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்! - ராமதாஸ் கண்டனம்..

தேசிய கைத்தறி விருதுக்கு  தேர்வாகியுள்ள திண்டுக்கல் நெசவாளருக்கு  வாழ்த்துக் கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் என்ற நெசவாளர் சிறந்த முறையில் திண்டுக்கல் பருத்திப் புடவைகளை வடிவமைத்து நெய்து வருவதற்காக,  தேசிய கைத்தறி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


 தேசிய கைத்தறி நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் விருதை பெறவிருக்கும் பாலகிருஷ்ணன் அவரது துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.