அன்புமணி மீது நடவடிக்கை கோரி ராமதாஸ் கடிதம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், இன்று கடந்த 7 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி நேரில் சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி வைத்திருப்பது சட்டவிரோதம் என்று தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், பாமக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமை இல்லை என்றார்.


