"ராமர் கோயில் திறப்பினை கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம்" - சென்னை உயர்நீதிமன்றம்

 
high court

ராமர் கோயில் திறப்பை  தனியார் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதி தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

tn

ராமர் கோயில் திறப்பை கோயில்களில் நேரலை செய்வது தொடர்பாக விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, அவசர வழக்காக நீதிபதியின் அறையில் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ,    "தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை  

tn

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.  உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர்  அனுமதியளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.