பரந்தூர் விமான நிலையத்திற்கு முழு ஒப்புதல்- போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
2028-க்குள் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் முழுமையாக நிறைவடையும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல், ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். இந்தச் சிற்றுண்டியகத்தில் டீ, காபி, அதிரசம், குடிநீர் பாட்டில்கள், மெதுவடை ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, “கோவை இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாவட்டமாக உள்ளது, பிரதமர் மோடி தமிழகம் மீதும் குறிப்பாக கோவை மீதும் கோவை மாவட்டத்தின் மீதும் வளர்ச்சிக்காக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக மாநில அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு பேசி தற்பொழுது நிறைவாக நிலம் கையகப்படுத்தி கொடுத்து வருகிறது. நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட உடன் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கும். தற்பொழுது உள்ள டெர்மினல் 18,000 சதுர மீட்டர் மட்டுமே உள்ளது, வரபோகும் புதிய டெர்மினல் 75 ஆயிரம் சதுர மீட்டர் வரை இருக்கும், எதிர்வரும் 20 ஆண்டு காலங்களில் ஒன்றரை கோடி பயணிகள் வருடம் தோறும் பயணிப்பார்கள். கோவையில் ஐ டி, ஜவுளித்துறை சிறு குறு நிறுவனங்கள் என்று பல்வேறு துறைகள் உள்ளது. தற்பொழுது பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பும் இங்கு நடைபெறுகிறது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மிகப்பெரிய டெர்மினல் கட்டப்படும், மத்திய அரசு சார்பில் விமான நிலைய விரிவாக்கத்திற்காகவே 2100 கோடி அதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும் கோவை விமான நிலையத்தில் முதல் தளத்தில் பயணிகளுக்காக விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைந்து நிறைவடையும். புதிய டெர்மினல் கட்டும் பொழுது நம் நாட்டின் கலாச்சாரம் ஆகியவை அந்த கட்டிடத்தில் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்படும் அதற்கான டிசைன்கள் முடிக்கப்பட்டவுடன் அனுமதி பெற்று கட்டப்படும். கோவை மட்டுமல்லாமல் பல்வேறு விமான நிலையங்களிலும் சர்வதேச விமான சேவைகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளது. அதற்காக பல்வேறு ஹப்கள் உருவாக்கி இந்திய நாட்டு விமான நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியாவில் விமானங்களுக்கான தேவைகள் என்பது அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர் என்னைப் பொறுத்த வரையிலும் சர்வதேச விமான சேவைகள் என்பதும் கோவையில் அதிகரிக்க வேண்டும். விமான சேவைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இண்டிகோ பிரச்சனை நிறைவடைந்து விட்டது போதுமான விமானிகளை அவர்கள் நியமித்து விட்டார்கள் தொடர்ச்சியாக அதனை கண்காணித்து வருகிறோம். 2028க்குள் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நிறைவடையும். தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் கட்டப்படுமா என்ற கேள்விக்கு, நெய்வேலி மற்றும் வேலூருக்கு புதிய விமான நிலையங்கள் வருவதாகவும் நெய்வேலியில் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து விட்டதாகவும் லைசன்ஸ் காக காத்துக் கொண்டிருக்கிறது. ஓசூர் விமான நிலையம் பாதுகாப்பு துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை. பரந்தூர் விமான நிலையம் மாநில அரசால் முன்னெடுக்கக்கூடிய திட்டம் அதற்கு மத்துய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது, நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும் அதேசமயம் அந்த விமான நிலையத்தை யார் மேம்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். மத்திய அரசை பொருத்தவரை விமான போக்குவரத்து மேம்பட வேண்டும் என்பதுதான் என்றும் புதிய மூன்று தனியார் நிறுவனங்களுக்கு தற்பொழுது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ” என தெரிவித்தார்.

