ரம்ஜான் பண்டிகை - ஓபிஎஸ் வாழ்த்து!!

 
ops

“ரம்ஜான்” திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியப் பெருமக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் "ரம்ஜான்" திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ரமலான் மாதம் என்றாலே இறை சிந்தனை என்ற ஒரே குறிக்கோள்தான். தானம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை மட்டுமே வெளிப்படுத்தும் மாதம் ரமலான் மாதம். இந்தப் புனித மாதத்தில், தூய உள்ளத்துடன் இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ops

புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு ஆண்டுதோறும் 4,500 மெட்ரிக் டன் அரிசி; உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியது; தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிருவாக மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியது; நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டுதோறும் வழங்கியது என பல்வேறு நலத் திட்டங்களை இஸ்லாமியப் பெருமக்களுக்காக செயல்படுத்தியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன்.

ops

"பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், பிணியுற்றவரைச் சென்று பாருங்கள், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்" என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனையை கருத்தில் கொண்டு, அனைவரும் தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டுமெனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.