புதுச்சேரிக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு - பிரதமர் மோடிக்கு ரங்கசாமி பாராட்டு..

 
ரங்கசாமி


புதுச்சேரி ரூ.3,124 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து புதுச்சேரி  முதலமைச்சர்  ரங்கசாமி அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவை மாநிலத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பீடை சரிசெய்ய ரூ.ஆயிரத்து 250 கோடி, 7-வது சம்பளக்குழு பரிந்துரையின் நிலுவைத்தொகை ரூ.150 கோடி உட்பட பல திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடி மத்திய அரசு ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய பட்ஜெட்

தனிநபர் வருமான உச்சவரம்பை உயர்த்தியது வரி செலுத்துவோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. வேளாண் மக்களின் நலனையொட்டி, கால்நடை வளர்ப்பு, பால் வளம், மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் பயனளிக்கும். உணவு தானிய விநியோகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி, பழங்குடியின மக்கள் பாதுகாப்புக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 ரங்கசாமி!

157 மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்பது உட்பட பல சிறப்பம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளது. அனைவருக்கும், அனைத்தும் என்ற வகையில் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பட்ஜெட்டால் பயனடைவர். சிறந்த பட்ஜெட்டை வழங்கிய பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.” குறிப்பிட்டுள்ளார்.