நடிகர் ராஜேஷ் அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் - ரஜினிகாந்த் இரங்கல்!

 
rajini rajini

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 8:15 மணியளவில் காலமானார். இவர் தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். இதேபோல் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் இந்த நிலையில், நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 8:15 மணியளவில் காலமானார். நடிகர் ராஜேஷ் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில், நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.