அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து கூறினார்.
நேற்று முன்தினம் (அக்-31) தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயனின் எப்போதும் அல்லாத மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அனைவரிடமும் பாராட்டையும் பெற்று வருகிறது.
அதிலும், இந்த படத்தில் எந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்திற்கு பலம் கொடுத்ததோ அதே அளவிற்கு இப்படத்தின் இசை முக்கிய பலமாக அமைந்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.42 கோடி அளவில் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து கூறினார். தனது நண்பர் கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார். அமரன் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார். தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். ரஜினி உடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.


