ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை!
Updated: May 15, 2025, 09:32 IST1747281777011
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ் புதுப்பேட்டை பகுதியில் பாலு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பாலுவின் மனைவி வேறு ஒரு ஆணுடன் தவறான தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று இரவும் தகராறு ஏற்பட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த பாலு தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார்.
தடுக்க வந்த மாமியார் மற்றும் மற்றோரு ஆண் நபரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரேதங்களை கைப்பற்றி அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 3 பேரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிய பாலுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


