பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு- விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்

 
ச்

பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரம் கொண்ட தவெக விர்சுவல் வாரியர்ஸ் மீதும், நடிகர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையர் அலுலலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தவெகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக்கூறி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் , சமூக வலைதளத்தில் தன்னை இழிவாக பேசிய தவெக தொண்டர்கள் (விர்சுவல் வாரியர்ஸ்சை) கண்டிக்க தவறிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கருத்து வேறுபாடு காரணமாக தவெகவில் இருந்து நான் வெளியேறிய நிலையில் தவெக விர்சுவல் வாரியர் தன்னை ஆபாசமாக பேசி வருவதாக குற்றம் சாட்டினார். தவெக கொடி சின்னத்துடன் என்னை இழிவாக பேசி வருவதாகவும்,தவெகவில் வெளியேறிய பெண்களை ஆபாசமாக இணைதளத்தை சித்தரிக்கும் கலாச்சாரம் தவெக விர்சுவல வாரியர்ஸிடம் உள்ளது என்றார். அவர்களை தவெக தலைவர் விஜய் கணடிக்கவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு விஜய் தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். எரிபொருள், லாக்டவுனை விட தவெக மிகப்பெரிய ஆபத்து எனவும் விமர்சித்தார். விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ,நேற்று விஜய் கொடுத்த புகார் பெண்கள் ஒட்டு பாதிக்கும் என்பதற்கான விஜய் நடத்திய நாடகம் என்றும் ரஞ்சனா நாச்சியார் கூறினார்.