#Breaking பகல் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குப்பதிவு ; குறைந்தபட்ச வாக்குபதிவு எங்கு தெரியுமா?

 
election

மக்களவை தேர்தலையொட்டி பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது.

election

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .மக்களவை தேர்தலையொட்டி பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது.  அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.08%, குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 32.31% வாக்குகள் பதிவாகியுள்ளன.

tt

கள்ளக்குறிச்சியில் 44% ,நாமக்கல்லில் 43.66% ,ஆரணியில் 43.62 சதவீதம், கரூரில் 43.60 சதவீதம் ,பெரம்பலூரில் 43.32% ,சேலத்தில் 43.19 சதவீதம், விழுப்புரத்தில் 42.89% ,விருதுநகரில் 42.34% , ஈரோட்டில் 42.23%,  சிதம்பரத்தில் 42.09% , திண்டுக்கல்லில் 41.97 சதவீதம்,  அரக்கோணத்தில் 41.92 சதவீதம்,  கிருஷ்ணகிரியில் 41.55 சதவீதம்,  திருவண்ணாமலையில் 41.46 சதவீதம் , நாகப்பட்டினத்தில் 41.43 சதவீதம்,  பொள்ளாச்சியில் 41.34% , வேலூரில் 41.24 சதவீதம்,  தேனியில் 41.24 சதவீதம்,  திருப்பூரில் 40.96 சதவீதம் , தஞ்சாவூரில் 40.81% , மயிலாடுதுறையில் 40.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.  வடசென்னையில் 35.09 சதவீதமும்,  தென் சென்னையில் 33.93 சதவீதமும்,  மத்திய சென்னையில் 32.31% வாக்குகள் பதிவாகியுள்ளது.