விரைவில் ஓடிடி-க்கு வரும் ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்'..!
Nov 21, 2025, 11:36 IST1763705191078
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தி கேர்ள் பிரண்ட்' சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக தயாராகி இருக்கிறது. அதன்படி, இப்படம் டிசம்பர் 11-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகை அனு இம்மானுவேல், ராவ் ரமேஷ், ரோகிணி மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தீரஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் வித்யா கோப்பினீடி மற்றும் தீரஜ் மோகிலினேனி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.


