பணிவு , மனிதநேயத்தின் அடையாளம் ரத்தன் டாடா - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பிரபலமான மற்றும் இந்தியத் தொழில்துறையில் தவிர்க்க முடியாத முக்கிய தொழிலதிபராக இருந்தவர் ரத்தன் டாடா. இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஒரு கேம்ஜேஞ்சராக விளங்கிய ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக முப்பையில் காலமானார். அவருக்கு வயது 86. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் துறையினர், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: “இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது தொலைநோக்குமிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும், புதுமையிலும், மனிதநேயச் செயல்பாடுகளிலும் ரத்தன் டாடா காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை அவர் பதித்துச் சென்றுள்ளார்.
இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். இத்துயர்மிகு தருணத்தில், ரத்தன் டாடா குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the passing away of Thiru. #RatanTata, a true titan of Indian industry and a beacon of humility and compassion.
— M.K.Stalin (@mkstalin) October 9, 2024
His visionary leadership not only shaped the Tata Group but also set a global benchmark for ethical business practices. His relentless dedication to… pic.twitter.com/4FFh60Ljbw