வேளாண் பட்ஜெட் 2023 - ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை

 
ration

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2023-24ம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். இநிலையில், 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.  
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.