போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்!
Apr 22, 2025, 12:05 IST1745303718959
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என
கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரேஷன் கடை ஊழியர்களின் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என
கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


