தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்!!

 
TNGOVT

நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 - 12:30 மணி வரையும், பிற்பகல் 3 - 7 மணி வரையிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும், இதர பகுதிகளில் காலை 9 - 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி - 6 மணி வரையும் ரேஷன் கடைகள் இயங்கலாம் என்றும்  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Ration shop

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில் நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன . ஏற்கனவே நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் தொடர்பான விபரங்கள் 2018 மக்கள் சாசனத்தில் திருத்தங்கள் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரமும் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ration card

நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் பெரும்பாலான நியாயவிலை கடைகளில் பின்பற்றப்படுவதில்லை . மாவட்டங்களில் நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரம் பெரும்பாலான கடை பணியாளர்களுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை . எனவே மாதாந்திர நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் , நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து தெரிவித்து,  குறித்த நேரத்தில் நியாயவிலைக் கடைகளை திறந்து செயல்படுத்த உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.  மேலும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் நியாய விலை கடையில் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
.