தேனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கையில் உலா வரும் எலிகள்

 
el

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கையில் எலிகள் சுற்றி வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.


தேனி மாவட்டம் கானாவிலக்கில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும்  வெளி நோயாளிகளும் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள்  படுக்கையை சுற்றி வலம் வரும் எலிகள், படுக்கையில் இருந்து மேலும், கீழும் தாவிக் குறித்து விளையாடும் காட்சிகளும் தரையில் சுற்றி வரும் காட்சிகளும், நோயாளிகள் வைத்திருக்கும் உடைமைகளை சுற்றி வரும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்  பரவி வைரலாகி வருகிறது.