தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரவி மோகன்.. பிரம்மாண்ட அறிமுக விழா.. குவிந்த பிரபலங்கள்..

 
ரவிமோகன் ஸ்டூடியோஸ் ரவிமோகன் ஸ்டூடியோஸ்


நடிகர் ரவி மோகன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில், இன்று அதற்கான அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

Image

திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழா சென்னையில்  பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.  அந்தவகையில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார், நடிகர்கள் கார்த்தி,  சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் ஜெனிலியா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.  

Image

தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரே நேரத்தில் 2 படங்களை ரவி மோகன் தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல்படமாக கார்த்தில் யோகி இயக்கத்தில் , ரவி மோகன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.   இரண்டாவதாக யோகி பாபுவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவகார்த்திகேயனும் , ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில்  ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Image

தயாரிப்பு நிறுவன விழாவில் சிவராஜ்குமாரிடம் ரவி மோகன், காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அத்துடன் கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் ரவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழா மேடையில் ஜெனிலியாவுடன், ரவி மோகன் சந்தோஷ் சுப்பிரமணியம்  படக்காட்சிகளை ரீகிரியேட் செய்து காட்டியது விழாவில் கலகலப்பை ஏற்படுத்தியது.  இந்த வீவியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.  நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே  பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.