"எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும்"- ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரும், திருமங்கலம் தொகுதியின் எம்எல்ஏ - வுமான ஆர் .பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதியில் உள்ள பெரும்பாலான கிராமப்புறங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலை வருவதை தடுப்பதற்கும், உச்சப்பட்டி , கப்பலூர், திருமங்கலம் நகரத்தில் உள்ள காந்தி நகர் , விமான நிலைய சாலை, கற்ப்பக நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டியும், தனது கோரிக்கை மனுவினை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி போன்று ஒரு பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும். பருவமழையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க ஸ்டாலின் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
நிதி ஆயோக் கூட்டத்தில் மூன்றாண்டுகள் ஸ்டாலின் கலந்து கொள்ளாமல் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்” என்றார்.


