“எவன் செத்தாலும் சரி, நான் முதலமைச்சர் என்ற விஜய்யின் போக்கை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”- ஆர்.பி.உதயகுமார்

 
rb udhayakumar rb udhayakumar

விஜய் எந்தவிதமான மக்கள் தொண்டும் செய்யவில்லை, தற்போது திடீரென வந்து இருக்கார் என முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

udhayakumar

திருமங்கலம் அடுத்த டி.குன்னத்துரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியதாவது, “அதிமுக தொண்டர்கள் வளர்த்த கட்சி. நம்ம கட்சி. இன்று எத்தனை பேர் இந்த கட்சியை காட்டிகொடுத்துவிட்டு பதவிக்காகவும், சுகத்திற்காகவும் வழக்கில் இருந்து தப்பிக்க ஓடிவிட்டு இன்று வீரவசனம் பேசுகிறார்கள். எவ்வளவு சோதனை வந்தது. இந்த பகுதியில் அதிகாரத்திற்காக பயந்து பலர் ஓடியுள்ளனர். இந்த பகுதியில் தன்மானத்துடன் கட்சியை காப்பாற்றியதால்தான்  நீங்கள் இருப்பதால்தான் இன்று டெல்லி தலைமை எடப்பாடி தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் போட்டியிடும் என முடிவு எடுத்துள்ளது. விஜய் எந்தவிதமான மக்கள் தொண்டும் செய்யவில்லை, தற்போது திடீரென வந்து இருக்கார். எவன் செத்தாலும் சரி, நான் முதலமைச்சர் என்ற விஜய்யின் போக்கை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
        
எடப்பாடியின் உழைப்புக்கும், அரவணைப்புக்கும் தாய் உள்ளத்துக்கும், ஆண்மைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாரதபிரதமர் வந்து இந்த பிரசாரத்தினை துவக்கி வைத்துள்ளார். மதுரையில் 10 தொகுதிகள் உள்ளன. ஆனால் அனைவரது கண்ணையும் உறுத்தக்கூடிய தொகுதி திருமங்கலம். அதற்கு காரணம் தொண்டர்களாகிய நீங்கள் அனைவரும் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதுதான். இனி 50 ஆண்டு காலத்திற்கு தலைவனை தேடவேண்டிய அவசியம் அதிமுகவிற்கு கிடையாது. எடப்பாடிபழனிச்சாமி தான் வழிகாட்டி. நடிகர் விஜய் எந்தவிதமான மக்கள் தொண்டும் இதுவரையில் செய்யவே இல்லை. ஆனால் திடீர் என வந்து இனிமேல் நாங்கள்தான் என்கிறாங்க. நல்லவே தமிழகத்திற்கு முதலமைச்சாரவேன் என்றார், இல்லைனா அமெரிக்கவுக்கு ஜனாதிபதி நாங்கதான் என கூட சொல்வாங்க அவர்கள். அதபத்தி நாம் கவலை படதேவையில்லை. நமக்கு போட்டியே எம்ஜிஆர் காலம் தொட்டு ஜெயலலிதா காலம் தொட்டு திமுகதான். எந்த தேர்தலிலும் திமுக அதிமுகவுக்கு தான் போட்ட. வேறு யாரையும் போய் பார்க்ககூடாது. ஆகவே வரும் தேர்தலில் கவனமாக பணியாற்றவேண்டும்” என பேசினார்.