பங்குச் சந்தையில் ஒரு பெரிய சரிவு வர வாய்ப்பு - எச்சரிக்கும் RBI கவர்னர்..!!

 
Q Q

RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், இப்போது கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் ஏறாமல், நிலையாக இருக்கிறது. ஏனென்றால், உலக நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எண்ணெயைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டன. ஆனால், இந்தப் பதற்றம் எங்கே போயிற்று? இப்போது அந்தப் பதற்றம் தான் தங்கத்தின் விலையை தொடர்ந்து ஏற்றி வருகிறது. நிச்சயமற்ற சூழலை இப்போது தங்கம் தான் காட்டுகிறது.

இப்போது கிட்டத்தட்ட எல்லா பெரிய பொருளாதார நாடுகளிலும் பணம் தொடர்பான நிதி நெருக்கடிகள் உள்ளன. மேலும், தொழில்நுட்பப் பங்குகளின் விலை அதிகமாக ஏறியிருப்பதால், உலக பங்குச் சந்தைகள் அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றன. இது ஆபத்து. அதனால், ஷேர் மார்க்கெட்டில் (பங்குச் சந்தையில்) ஒரு பெரிய சரிவு வரலாம்.

இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைக்க தங்கத்தை நாடுகிறார்கள். அதனால்தான், தங்கம் தொடர்ந்து ஏழாவது வாரமாக விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் தங்கம் 1,200% விலை உயர்ந்து, ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்

.