10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!!

 
ttn

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் அடுத்ததாக செப்டம்பர் மாதத்தில் துணைத்தேர்வர்களாக அறிவிக்கப்பட்டு தேர்வில் கலந்து கொண்டார்.  அந்த வகையில் நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் பங்கேற்று எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் மறுகூட்டல் கோரி சில மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். 

school

இந்த சூழலில் மறுகூட்டல் கோரி விண்ணப்பம் செய்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வு எண் , பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு லாகின் செய்து தங்களுடைய திருத்தப்பட்ட மதிப்பெண்கள் என்ன என்பது தெரிந்து கொள்வதுடன், தற்காலிக சான்றிதழ்களை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தும்  கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

school

இன்று வெளியாகும் மதிப்பெண் பட்டியலில் இடம் பெறாத மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்ணில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது பொருள்.  இதனால் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் முடிவு என்ன என்பதை இன்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.