தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
Nov 29, 2024, 07:51 IST1732846867357
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் 30ம் தேதி கரையை கடக்கும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 30ம் தேதி காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு 480 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.